கா. பொ. த உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற இருக்கின்றன.
இந்நிலையில் குறித்த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது நோய் அறிகுறிகள் வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தோற்றுவதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய வீட்டிற்கும் பரீட்சை எழுதும் மத்திய நிலையத்திற்கும் இடையில் அதிகதூரம் காணப்படுமிடத்து, அவ்வாறானவர்கள் வீட்டிற்கு அருகிலுள்ள விசேட பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுத முடியும் என்று குடும்ப சுகாதார பணியகதின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்திரமாலிடி சில்வா தெரிவித்துள்ளார்.



