தற்போது நாட்டில் அதிகளவு எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருகின்றது
இந்நிலையில் எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சட்ட உதவிகளை வழங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் பாதிக்கப்பட்ட மக்களுடன் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றைய தினம் கலந்துரையாடல் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது அரசாங்கத்தின் இயலாமையால் ஏற்பட்ட எரிவாயு டன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் காரணமாக நாட்டில் எரிவாயுவை பயன்படுத்தும் சகல மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தற்போது வரையில் 850 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



