நாட்டில் மின் தடை ஏற்படுமா?- இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்.

0

மின்சார சபை மற்றும் கனிய வள கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

மின்சார துண்டிப்பு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ளும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அத்துடன் களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான டீசல் பற்றாக்குறை காரணமாக அந்த மின் உற்பத்தி நிலையத்தில் ஒரு பிரிவின் செயற்பாடுகள்
பாதிப்படைந்துள்ளன.

இதன் பிரகாரம் மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நேற்றைய தினம் இரவு மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

மேலும் குறித்த மின் உற்பத்தி நிலையத்தின் பாதிப்பு காரணமாக தேசிய மின் கட்டமைப்பில் 165 மெகாவோட் மின்சாரத்திற்கான பற்றாக்குறை நிலவும்.

எரிபொருள் இன்மையால் சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் நேற்றைய தினம் மதியம் தடைபட்டது.

மேலும் இந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான டீசல் இன்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இதன் பிரகாரம் சப்புகஸ்கந்த டீசல் மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் பாதிப்படையும் ஆயின் தேசிய மின் கட்டமைப்பில் மேலும் 150 மெகாவோட் மின்சாரத்தடை ஏற்படும்.

அவ்வாறாயின் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிக காலம் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply