கோவிலுக்கு வருடா வருடம் மாலை அணிந்து செல்பவரா நீங்கள்…!!

0

துளசி மாலையை நிரந்தரமாக அணிந்து கொள்ள விரும்புபவர்கள் அதற்கு முன்பாக சில விடயங்களை செய்த பின்பு அணிவதே முறையாகும்.

நீங்கள் வாங்கிய துளசி மாலையை முதலில் உங்கள் வீட்டு பூஜையறையில் இருக்கின்ற விஷ்ணுபகவான் படத்திற்கு முன்பாக சிறிது நேரம் வைக்க வேண்டும்.

அதன் பிறகு அந்த துளசி மாலையை காய்ச்சாத பசும் பாலைக் கொண்டு சுத்தம் செய்த பிறகு, மஞ்சள் நீர் கொண்டு சுத்தம் செய்து உலர்த்தி, உங்கள் கைகளில் வைத்துக்கொண்டு பின்பு 1008 முறை உங்கள் இஷ்ட தெய்வத்தின் மூல மந்திரம் மற்றும் விஷ்ணு பகவான் மூல மந்திரத்தை துதிக்கவேண்டும்.

இதன்பிறகு துளசி காயத்திரி மந்திரத்தை 8 முறை ஜெபம் செய்ய வேண்டும்.

பின்பு ஸத்யோஜாத மந்திரத்தை துதிக்கவேண்டும். இறுதியாக துளசி தேவிக்கு நன்றி செலுத்தும் விதமாக துளசி மந்திரத்தை துதித்த பிறகே துளசி மாலையை நீங்கள் அணிந்து கொள்ள வேண்டும்.

இந்த மாலையை உங்களின் ஆன்மீக குருவின் கைகளால் அணிந்து கொள்வது மிகவும் சிறப்பானதாகும்.

துளசி மாலையை நிரந்தரமாக அணிந்து கொள்ள விரும்புவர்கள் சில முக்கியமான விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

துளசி மாலையை அணிந்து கொண்டு பொய் பேசுதல், பிறரை கெட்ட வார்த்தைகளால் நிந்தித்தல், அடித்தல், சூதாடுதல், மது – மாமிசம் உண்ணல் போன்ற தர்மத்திற்கு புறம்பான செயல்களை செய்யக்கூடாது.

துளசி மாலை அணிந்து கொண்டு இல்லற இன்பம் துய்க்கக்கூடாது. பிறப்பு – இறப்பு வீடுகளுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக துளசி மாலையை கழற்றி பூஜையறையில் வைத்து விட்டு சென்று திரும்பிய பிறகு நீராடிவிட்டு துளசி மாலையை அணிந்து கொள்ளலாம்.

துளசி மாலை மிகவும் பழையதாகிவிட்டாலும், அறுந்து போனாலும் அம்மாலையை ஏதாவது ஒரு ஓடும் ஆற்றிலோ அல்லது கடலிலோ விட்டு விட்டு மீண்டும் புதிய துளசி மாலையை மேற்சொன்ன முறையில் சுத்தம் செய்து மந்திரம் துதித்து அணிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply