நாட்டில் தற்போது எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்நிலையில் இந்த எரிவாயு தட்டுபாடு மேலும் சில நாட்களுக்கு தொடரும் என எரிவாயு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நாட்டில் நிலவும் தொடர் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லாஃ ப்ஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 10,000 டன் எரிவாயு வழங்கிய கப்பல் ஒன்று நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்தது.
குறித்த எரிவாயு தொகை உரிய தரத்துடன் உள்ளமை உறுதி செய்யப்பட்டமையை அடுத்து அதனை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



