தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகள் தீர்த்து உடனடியாக பல்கலைக்கழக செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஒரு சந்தர்ப்பத்தில் 50 சதவீத மாணவர்கள் எண்ணிக்கையுடன் பல்கலைக்கழக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் சகல மாணவர்களை உடனடியாக அழைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
இதன் பிரகாரம் பரீட்சைகள் நடத்துதல், இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகள் என்பன தற்போது பல்கலைக்கழகங்களின் முன்னெடுக்கப்படுவதாகவும் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



