கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாண பணிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
இந்நிலையில் குறித்த நிர்மாண பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப் படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி பணிகளை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
துறைமுகங்களின் தரவரிசை பட்டியலில் இலங்கை 23 வது இடத்தில் உள்ளது.
மேலும் 2035 ஆம் ஆண்டை அடையும் போதும் கொழும்பு துறைமுகத்தை ஏராளமான கொள்கலன்களை கையாளும் பிரபலமான துறைமுகமாக மாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



