சந்தையில் அதிகரிக்கும் மண் சட்டிகளின் விலை.

0

தற்போது இலங்கையில் எரிவாயு நெருக்கடி இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் சந்தையில் அதிக தேவை இருப்பதால் , மண்பாண்டங்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது என நுகர்வோர் குறிப்பிட்டுள்ளனர்..

அத்துடன் நாட்டில் 120 முதல் 200 ரூபாய் வரை விற்கப்பட்ட மண்சட்டி தற்போது 450 முதல் 500 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை ரீதியில் உற்பத்தி செய்யப்படும் நான்கு வகை அடுப்புகளுக்கும் அதிக கேள்வி நிலவுகிறது.

நாள் முழுவதும் உற்பத்தியில் ஈடுபட்டாலும் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என களிமண் அடுப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply