இந்தியாவில் தற்பொழுது பல்வேறு மாநிலங்களில் கொவிட் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதி செயப்படுள்ளது.
அத்துடன் மகர சங்கராந்தி அன்று கங்கை நதியில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என ஹரித்வார் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் ஒமிக்ரோன் வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு ஜனவரி 14 ஆம் திகதி மகர சங்கராந்தி அன்று கங்கை நதியில் புனித நீராடலுக்கு முழு தடைவிதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



