நுகர்வு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது.

0

இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டுக்கு 105 ரூபாய் விட அதிக விலைக்கும் , சம்பா அரிசி 130 ரூபாய் விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படாத வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வர்த்தக அமைச்சர் என்ற அடிப்படையில் இந்தியாவிலிருந்து 2 லட்சம் மெற்றிக்டன் அரிசியையும், ஒரு லட்சம் மெற்றிக்டன் சம்பா அரிசியையும், தனியார்துறையின்றி, அரச வணிக கூட்டுத்தாபனத்தின் மூலம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே செயற்கையாக, அநீதியான முறையில், விலை அதிகரிப்பை மேற்கொள்ள திட்டமிடுபவர்களுக்கு, அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்படமாட்டாது.

சீன – இலங்கை, இறப்பர் – நெல் ஒப்பந்தத்தின் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு , சந்தையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்த ஒரு தொகை அரிசியை பெற்றுக்கொள்ள முடியுமா? என்பது தொடர்பில் செய்த தூதுவர் உட்பட சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்ததாக வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நுகர்வு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட அரசாங்கத்தால் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply