தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்.

0

தனியார் பேருந்து உரிமையாளர்கள்
சிலர் பணி புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் பாணந்துறை மற்றும் மொரட்டுவையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்து ஊழியர்களே குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் பாணந்துறை – மொரட்டுவையில் இருந்து கொழும்பு நோக்கி பேருந்துகளை இயக்கும் நீண்ட தூர பேருந்து சாரதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே குறித்த பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பேருந்து ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply