தமிழகத்தில் கொவிட் வைரஸ்களின் தாக்கம் தீவிரமடைந்து வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் திகதி வரை இரவு நேர ஊரடங்கு நீடிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அத்துடன் தமிழகத்தில் கொவிட் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகை நாட்களான 14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 சதவீதம் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



