கடந்த ஆண்டு காட்டு ஜானு மற்ற மனிதர்களின் பிரச்சனைகள் காரணமாக 127 பேர் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு 360 யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தொடருந்துகள் மோதி ஏற்பட்ட விபத்தில் உள்ளிட்ட காரணங்களினால் இவ்வாறு யானைகள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் 50 சதவீதமான யானைகளின் மரணங்கள் மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாகவே நிகழ்ந்துள்ளன.
இதன்படி சுமார் 200 யானைகள் மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாக உயிரிழந்துள்ளது.
மேலும் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு யானைகள் மற்றும் மனிதர்களின் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



