பூசகர் குடும்பத்தினரை கடத்திச் சென்ற நால்வர் அதிரடி கைது.

0

பூசகர் உட்பட குடும்பத்தினரை கடத்திச் சென்று 7.5 மில்லியன் ரூபாவை கொள்ளையடித்த நால்வர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இதற்கமைய வெல்லாவய – குடா ஓயா பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றை உடைத்து அதன் பூசகர், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை கடத்திச் சென்று 7.5 மில்லியன் ரூபாவை கொள்ளையடித்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

. அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களுடன் குறித்த நபர்கள் மொனராகலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வீரவில பிரதேசத்தை சேர்ந்த 30-40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply