தமிழகத்தில் ராமேஸ்வரம் கோவிலில் காவல்துறை குவிப்பு.

0

தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் ஒன்றாக காணப்படுவது ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் ஆகும்.

அவ்வாறு ஏற்கனவே ராமேஸ்வரம் கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலதிகமாகவே கோவிலின் நான்கு வாசல் பகுதியிலும் இருபத்திநான்கு மணிநேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் கோவிலுக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனை தொடர்ந்து ராமேஸ்வரம் கோவிலில் கடந்த சில நாட்களாகவே தற்போது இருப்பதை விட கூடுதலாக காவல்துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்பாக கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் எப்படி குண்டு தடுப்பு பிரிவு உள்ளிட்ட காவல்துறையினர் கூடுதலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply