கொழும்பில் ஏற்பட்ட வாகன நெரிசல் அவதியில் மக்கள்.

0

கொழும்பின் சில பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதற்கமைய கொழும்பு – கண்டி வீதியின் புதியகாலனி பாலத்தின் கொழும்பிற்கு பிரவேசிக்கும் பகுதியில் இந்த கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் high-level வீதியின் நுகெகோட, கொஹுவலை, நாவல, ராஜகிரிய மற்றும் நாடாளுமன்ற சுற்றுவட்ட பகுதிகளிலும் இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பாடசாலைகளின் சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் வழமைபோன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply