இலங்கையில் காகிதங்களுக்கு தட்டுப்பாடு.

0

பத்திரிகைகளை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .

இதனால் சகல பத்திரிகை தொழில் துறையினரும் பல்வேறு பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றனர்.

அத்துடன் டொலர் தட்டுப்பாடு மற்றும் உலகளவில் காகிதங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பன இதற்கு பிரதான காரணமாக கருதப்படுகின்றது.

இதன் பிரகாரம் செய்தித்தாள்களை அச்சிடுவதற்கா பயன்படுத்தப்படும் காகிதங்களின் விலையானது கடந்த மாதத்தை காட்டிலும் இந்த மாதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஒரு டன் காகிதம் 450 அமெரிக்க டாலராக காணப்பட்ட நிலையில் தற்போது 800 அமெரிக்க டாலராக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply