தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ?

0

தற்போது தமிழகத்தில் கொவிட் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது..

இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இவ்வாறு விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடைகின்றன .

அத்துடன் கடந்த 6ஆம் திகதி முதல் தினமும் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மருத்துவத் துறை அதிகாரிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார்.

மேலும் தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு குறித்த கலந்துரையாடல் நடைபெறும்.

Leave a Reply