தமிழகத்தில் கொவிட் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் குறித்த வைரஸ் தொற்று விரைவில் பரவலடைந்து வருகின்றது.
இதன் பிரகாரம் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதற்கமைய இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
அவ்வாறு சுற்றுலா தலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவு மக்கள் கூடுவார்கள்.
இதனை தவிர்க்கும் வகையில் நாளில் சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து புனித தலத்தில் நீராடுவார்கள்.
மேலும் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் பரிகாரங்கள் செய்ய தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் அதிக அளவு அவர்கள்..
இதன் பிரகாரம் கொவிட் தொற்றுப் பரவல் காரணத்தால் நாளை முழு ஊரடங்கு அமுல்ப்படுத்தப் படுகின்றது.
இதனையொட்டி இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடும் பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



