நாட்டில் தற்போது வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மாத்திரம் வாகன விபத்துக்களால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காலி கொழும்பு பிரதான வீதியில் வெள்ளவத்தை பகுதியில் கொழும்பு நோக்கி பயணித்த உந்துருளி 1 வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.
அத்துடன் களுபே – ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு அளுத்கமவில் உந்துருளி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளிகள் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் அகலவத்தை மற்றும் கொஸ்கொட பிரதேசங்களில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் இருவர் பலியாகியுள்ளனர்.
உயிரிழந்த இருவரில் பன்வெல்துவ, கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் பலியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



