தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு.

0

தமிழகத்தில் தற்போது கொவிட் தொற்றின் தாகம் தீவிரம் அடைந்து வருகின்றது.

இந்நிலையில் குறித்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றார்.

அத்துடன் கொவிட் இந்த நோய் தொற்றை தடுக்கும் பணி தொடர்பாக கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் குறித்த கூட்டத்தின் போது தமிழகத்தில் கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் குறித்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

அவ்வாறு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply