இளைஞர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்.

0

இலங்கையில் இளைஞர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த நிகழ்வு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றது.

இந்நிலையில் 15 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 29 வயதிற்கு குறைந்த இளைஞர்களுக்கே இந்த டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் சர்வதேசரீதியில் பிலோக் மூலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பம் ஊடாக இந்த அடையாள அட்டை தயாரிக்கப்பட்டதாக தேசிய இளைஞர் மன்றம் குறிப்பிட்டுள்ளது.

இவற்றுள் இளைஞர்களின் கல்வி மற்றும் தொழில் தகுதி உள்ளிட்ட ஏனைய தகுதிகள் உள்ளிட்ட தரவுகளை கொண்ட வாங்கியாக பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதுடன் சேவையாளர்களுக்கு தகுதியான இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்புக்கு தெரிவு செய்வதற்கும் இதனூடாக வசதி கிடைக்கும்.

மேலும் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அடையாள அட்டையை தேசிய இளைஞர் மன்றத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply