அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் போது ஒழுக்கமற்ற விதத்தில் செயற்பட வேண்டாம் என அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சர்களுக்கும், அமைச்சர்களும் அரசாங்கத்தை கவிழ்க்கும் தனிப்பட்ட நோக்கத்துடன் செயற்படக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அரசாங்கத்தை விமர்சித்தமை குறித்து கடும் சீற்றம் அடைந்திருந்த ஜனாதிபதி , அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது ஒழுக்கமான செயல் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் இந்த அரசாங்கமும் தனது உறுப்பினர்கள் மத்தியில் ஒழுக்கங்களை வேண்டும் .
மேலும் பொது அரங்கில் விமர்சிப்பதன் மூலம் உரிய தீர்வுவை காண முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.



