வெங்காயம் உணவல்ல, ஒரு அற்புத மருந்து…!

0

வெங்காயத்தின் நற்குணங்களை வறையறுத்துக் கூற முடியாது. எனினும் இவை உடலுக்கு எப்படி பயனளிக்கிறது என்று பார்ப்போமா?

வெங்காயத்தின் நற்குணங்களை வறையறுத்து கூற முடியாது. எல்லா உணவுகளிளும் யோசிக்காமல் சேர்க்கும் ஒரே காய்கறி என்றால் அது வெங்காயம் தான். ஏன் என்று தெரியுமா? சும்மா இல்லைங்க… உணவிற்கு ருசியை சேர்ப்பதோடு மருத்துவ குணங்களும் இணைத்து தரும் என்பதால் தான்.

இந்த வகை வெங்காயம் அந்த வகை வெங்காயம் என்றெல்லாம் இல்லை, வெங்காயம் என்றாலே வேறு பாடுகள் இன்றி நன்மையளிக்கக்கூடியது தான். ஒரே பலனைத்தான் தருகின்றன. கிடைக்கும் வகைகளை பயன் படுத்திக்கொள்ளுங்கள்.


மேலும் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் அதிகம் இதில் உள்ளது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன் படுத்துகிறார்கள். நமது முன்னோர்கள் பயன்படுத்திய பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது.

சரி இப்போது இவை எப்படி எடுத்துக் கொண்டால் என்ன என்ன பலன் கொடுக்கும் என்று பார்ப்போமா..?

வெங்காயத்தின் நன்மைகளும், பயன்பாடும்:

* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் வல்லமைக் கொண்டது. இதை மோரில் சேர்த்துக் குடித்தால் இருமல் குறையும்.

* வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல் வலி, ஈறு வலி குறையும்.

* வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் சில வாரங்களில் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

* வெங்காயத்தில் 100 கிரமிற்கு 0.1 கிராம் கொழுப்புச்சத்து தான் உள்ளது. எனவே எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

Murunga sudu curry

* வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. இதனால் ஜீரணம் சுமூகமாக இருக்கும்.

* வெங்காயத்தில் OPC quercetin எனப்படும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ரசாயனம் இருக்கிறது, இதனால் ரத்த அழுத்த பிரச்னைகள் கட்டுப்பாடுகள் இருக்கும்.

* சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் அது உடலில் உள்ள பித்தம் குறையும்.

* வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். Source: tamil.eenaduindia

* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply