சந்தையில் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயத்தின் விலை தற்போது குறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இவற்றின் வர்த்தக பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டது இதற்கு பிரதான காரணமாகும்.
அத்துடன் கடந்த 31ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் சம்பந்தமாக சுங்க வரியை 30 ரூபாவினால் குறைந்திருந்தது.
சந்தையில் இவற்றிற்கு இருந்த விலையை குறைப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.
மேலும் ஜனாதிபதியின் ஆலோசனைகமைய நிதி அமைச்சரின் அங்கீகாரத்துடன் சம்பந்தப்பட்ட வரி குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



