பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்தல் , சேமித்து வைத்தல் மற்றும் வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதோடு, சேமித்து வைக்கப்படும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதையும், பொருட்களின் சேமிப்பு திறன் மேம்படுத்துவதையும் தலையாய நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் செயல்பட்டு வருகின்றது.
இதற்கமைய திமுக அரசு பொறுப்பேற்றதன் பின்னர் முதன் முதலாக மதுரை மாவட்டம், தொப்பூர் அருகே ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்த வெளிகளில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு திறந்தவெளி களத்தில் வைக்கப்பட்டுள்ளதால் குறித்த அரிசி மூடைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
இதனை நிறைந்த உணவு துறை அமைச்சர் தோப்பூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
அமைச்சரின் உறுதிமொழியையும் மீறி சில நாட்களிலேயே, கள்ளகுறிச்சி மாவட்டம் , உளுந்தூர்பேட்டை தாலுகாவில், திறந்தவெளியில் வைக்கப்பட்ட கொள்முதல் செய்யாத பத்தாயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் சேதமடைந்துள்ளன.
ஆகவே தமிழக முதலமைச்சர் அவர்கள் இந்த பிரச்சினையில் உடனடியாக கவனம் செலுத்தி திறந்தவெளி கலங்களில் உள்ள நெல் மூட்டைகளை மத்திய மாநில அரசுக்குச் சொந்தமான கிடங்குகளில் அல்லது அரசு கட்டடங்களில் பாதுகாப்பாக வைக்கவும்.
நீலம் கிடங்குகள் கட்டும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்வதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



