தனியார் பேருந்து சேவையாளர்கள் சிலர் தற்போது சேவையில் இருந்து விலகியுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சுமார் பத்தாயிரம் தனியார் பேருந்து சேவையாளர்களே இவ்வாறு சேவையில் இருந்து விலகியுள்ளனர்.
அத்துடன் தற்போது 50 சதவீதமான அளவில் நாடளாவிய ரீதியில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் பேருந்து சேவையாளர்களுக்கு பாரிய பற்றாக்குறை நிலவுகின்றது.
மேலும் தற்போது வரையில் சுமார் 10,000 சேவையாளர்கள் சேவையில் இருந்து விலகி வேறு வேலைகளை நாடியுள்ளனர்.
இதன் காரணத்தால் தனியார் பேருந்து தொழில்துறை பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளது.



