நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யும்.
அவவ்வாறு சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பாகும்.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



