நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் களையும் விரிவுரைக்கு அழைப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் 50% கொள்ளளவுடன் மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த தீர்மானம் நாளை முதல் அமுலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



