பாம்பு தீண்டி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.

0

பாம்பு தீண்டி குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் அனலை தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் அனலைதீவு 5ஆம் வட்டாரத்தை சேர்ந்த 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதியே வீட்டு முற்றத்தில் நின்றிருந்தபோது இனம்தெரியாத பாம்பு ஒன்று அவரைத் தூண்டியது.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மறுநாள் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு கடந்த 26ஆம் திகதி திடீரென மயக்க நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave a Reply