திருகோணமலை எண்ணெய்க் களஞ்சிய அபிவிருத்திக்காக புதிய நிறுவனம் நியமனம்.

0

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக, ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிடெட் என்ற புதிய நிறுவனம்
ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய எரிசக்தி அமைச்சரினால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய இந்த புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஒரு மாதத்திற்குள் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply