சமையல் எரிவாயு தட்டுபாட்டுக்கு விரைவில் தீர்வு.

0

இலங்கையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் இரண்டு வாரங்களின் பின்னர் முடிவுக்கு வரும் என லிட்ரோ பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எரிவாயுவை தாங்கி வந்த கப்பலொன்று, மீள திருப்பி அனுப்பப்பட்ட மையால், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சில பிரதேசங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெற்றது.

இருப்பினும் சில பகுதிகளுக்கு போதுமான அளவு எரிவாயு கிடைக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தங்களுக்கு போதுமான அளவில் சமையல் எரிவாயு கிடைக்கவில்லை நுகர்வோரும் எரிவாயு விற்பனையாளர்களும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply