துபாய் நோக்கி பயணிக்க முயற்சித்த 7 நபர்களுக்கு நேர்ந்த கதி.

0

அதிக பெறுமதி உடைய வெளிநாட்டு நாணயங்களுடன் துபாய் நோக்கி பயணிக்க முயற்சித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்றைய தினம் பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து அமெரிக்கன் டாலர், யூரோ மற்றும் ஸ்ரேலிங் பவுன் என்பன கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply