கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
அத்துடன் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி அனைத்து குடிமக்களுக்கு, குறிப்பாக தமது கிறிஸ்தவ சகோதரர் , சகோதரிகளுக்கு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் இயேசு கிறிஸ்துவின் செய்தியான அன்பு, கருணை, ஆகியவை இன்றும் கூட ஒட்டு மொத்த மனித குலத்தையும் ஈர்ப்பது தொடர்கிறது.
அவ்வாறு தனது வாழ்வில் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளையும் , போதனைகளையும் ஏற்று நடப்பதன் மூலம் நீதியின் மாண்புகள் மற்றும் சுதந்திர தின அடிப்படையிலான சமூக கட்டமைக்க எப்படி என இந்நாளில் நாம் உறுதி ஏற்போம்.



