இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு.

0

இந்த வருடம் நவம்பரில், இலங்கையின் ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 55.1 சதவீதத்தால் 1,215 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆடை ஏற்றுமதி 52.7 சதவிகிதம் அதிகரித்து கிட்டத்தட்ட 500 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது.

அத்துடன் இறப்பர் ஏற்றுமதியும் 47 சதவிகிதம் அதிகரித்து 102.2 மில்லியன் டொலர்களாக உள்ளது.

மேலும் தேயிலை ஏற்றுமதி வருமானம் 22.3 சதவிகிதம் அதிகரித்து 117.65 மில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது.

தேங்காய் ஏற்றுமதி நவம்பர் மாதத்தில் 40.6 சதவிகிதம் அதிகரித்து 80 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது.

மேலும் இலங்கையின் முக்கிய கொள்வார்களாக ஐக்கிய இராச்சியம், இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தவிர, பெரும்பான்மையான ஏற்றுமதிகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகின்றது.

Leave a Reply