தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருகின்ற நிலையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிக்காது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு பிரதான காரணம் இறக்குமதி வரியை அரசாங்கம் நீக்கியமையே என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் வரி நீக்கத்தால் முட்டை உற்பத்தி செலவு குறைந்துள்ளதுடன், இந்த நாட்களில் ஒரு முட்டையின் விலை 23 ரூபா 50 சதத்திற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை கோழி இறைச்சியின் விலையை சுமார் 50 ரூபாவினால் குறைக்கநடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்தே விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



