மதிய உணவு மரக்கறி பொட்டலத்தில் விலை சடுதியாக உயர்வு.

0

நாளை முதல் 80 சதவீதத்திற்கும் அதிகமான சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய உள்நாடு திரவ பெட்ரோலிய எரிவாயு தட்டுப்பாடு காரணத்தால் குறித்த செயற்பாடு அமுல்படுத்தப்படுகிறது.

அத்துடன் மரக்கறி விலை அதிகரிப்புக்கு மேலதிகமாக சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு பிரதான பிரச்சினையாக மாறியுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பிரகாரம் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தங்கள் சேவைகளை தொடர முடியாத நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மரக்கறிகளின் விலை அதிகரித்த காரணத்தால் மரக்கறி மதிய உணவு பொட்டலங்களின் விலை 180 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply