கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது.
இதற்கமைய குறித்த வைரஸ் தொற்று அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா,ஆகியவை முதல் ஐந்து இடங்களில் காணப்படுகின்றன.
இந்நிலையில் உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 கோடியே 31 லட்சத்து 80 ஆயிரத்து 283 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இந்த வைரஸ் தொற்றால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 லட்சத்து 51 ஆயிரத்து 955 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 24 கோடியே 52 லட்சத்து 72 ஆயிரத்து 479 பேர் குணமடைந்துள்ளனர்