நாடாளுமன்றில் இன்று நடைபெறவுள்ள குளிர்கால கூட்டத்தொடரின் போது உத்தர பிரதேசத்தை சேர்ந்த 40 பாஜக எம்பி களை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவுள்ளார்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்டம், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் 2022 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது.
அத்துடன் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜக மிகத் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி குளிர்கால கூட்டத் தொடரின்போது கட்சி எம்பிகளுடன் சந்திப்பு மேற்கொண்டு வருகின்றார்.
இதன் பிரகாரம் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உணவு இடைவெளியில் 40 பாஜக எம்பி களை சந்தித்து சட்டசபை தேர்தல் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதில் கூட்டணி எம்பி களும் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



