சொத்தையான கால் நகங்கள் உள்ளதா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க!

0


நம் சுத்தத்தை கால் விரல்களை வைத்து மதிப்பிடுவார்கள். அத்தோடு அழகில் முக்கிய பங்காக கால்களும் உள்ளது கால்களின் அழகை கால் விரல்களே எடுத்துக்காட்டும் நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு நகங்களை பராமரிக்காமல் விட்டவுடன் பூஞ்சை பிடித்து நகங்களில் சொத்தை வந்துவிடும். அப்படி வந்தவர் இதை எப்படி நீக்குவதென யோசிப்பார்கள். சில வழிகள் உள்ளது.


மஞ்சள்
தினமும் குளிக்க செல்ல முதல் மஞ்சள் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து ஊறவைத்து மசாஜ் செய்து குளிக்கவும், இதில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமுள்ளதால் விரல்களில் ஏற்படும் சொத்தைகளை வரவிடாமல் தடுக்கும்.


பேக்கிங் சோடா
சொத்தை வந்த இடங்களில் பேக்கிங் சோடா, தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் ஊறவைத்து கழிவி வர வேண்டும். பேக்கிங் சோடா இயற்கையில் ஒரு காரத் தன்மை கொண்டது. இதனால் சொத்தை மேற்கொண்டு அதிகரிக்காமலும், மற்ற விரல்களுக்கு பரவாமலும் தடுத்துவிடும்.


எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறினை ஒரு பஞ்சினால் எடுத்து, அதனை நகங்களில் பூசி வந்தால், பூஞ்சை தொற்று மற்றும் அழுக்குகள் நீங்கும். எலுமிச்சை அழுக்குகளை நீக்கும் தன்மை கொண்டது.


மருதாணி
அடிக்கடி மருதாணி இலைகளை அரைத்து நகங்களில் பூசி வந்தால் சொத்தை நகங்கள் விழுந்து புதிய நகங்கள் முளைக்கும். மருதாணியில் குளிர்ச்சி உள்ளதால் நகங்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.


வேப்பில்லை
கைஅளவு வேப்பில்லை எடுத்து அரைத்து அதில் சிறிது மஞ்சள் தூள் கலந்து சொத்தை நகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்துக் கழுவவும். காலை வாரத்தில் ஒரு நாள் தேங்காய் எண்ணெய், உப்பு, எலுமிச்சை ஆகியவற்றை வெதுவெதுப்பான நீரில் போட்டு 20 நிமிடம் கால்களை ஊறவைக்கவும் இவ்வாறு செய்வதால் கால்கள் பளபளப்பாக இருப்பது மட்டுமில்லாமல், நகங்களில் வரும் சொத்தைகளும் போய்விடும். – Source: boldsky


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply