இலங்கையில் மரக்கறிகளின் விலையில் சிறிய வீழ்ச்சி..!!

0

கொழும்பு மெனிங் சந்தையில் இன்றைய தினம் மரக்கறிகளின் விலையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு மக்களிடம் காசு இல்லையெனவும், இதனால் பெருமளவான மரக்கறிகள் சந்தையில் தேங்கிக்கிடப்பதாக மெனிங் சந்தையின் வர்த்தக சங்கத்தின் தலைவர் எச்.எம்.உபசேன தெரிவித்தார்.

இதன்படி போஞ்சி, லீக்ஸ், கரட் மற்றும் கோவா உள்ளிட்ட மரக்கறிகளின் விலையில் சிறிய அளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பேலியகொட மீன் சந்தையிலும் கடலுணவுப் பொருட்களின் விலையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply