தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனராக இருப்பவர் லலிதா ஷோபி மாஸ்டர்.
இவர் சுபியம் சுஜாதாவும் என்ற படத்திற்காக கேரளாவின் மாநில விருது பெற்றிருக்கிறார்.
கமல்,விஜய், ஜோதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை நடனத்திற்காக ஆட்டி வைத்தவர்.
இப்போது அட்லி இயக்கி வரும் ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் படத்தில் இருவருக்கும் நடனம் லலிதான்.
ஒரு படத்தில் ஹீரோ ஹீரோயினி நன்றாக நடனம் ஆடியிருந்தால் அதற்கு பின்னால் ஒரு நடன இயக்குனரின் உழைப்பும் இருக்கின்றது.
இது அந்த நடிகர் நடிகைகளுக்கும் தெரியும்.
ஆனால் ரசிகர்கள் சொல்லும்போது குறிப்பிட்ட நடிகர் நடிகைகளின் பெயரை சொல்லி சூப்பராக நடனம் ஆடினார்கள் என்றுதான் சொல்லுவார்கள்.
ஆனால் சம்பந்தப்பட்ட ஹீரோவும் ஹீரோயினும் உங்களை தனிப்பட்ட முறையில் அழைத்து பாராட்டுவார்கள்.
இதுதான் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
அனுஷ்கா, ஜோதிகா இரண்டு பேரும் வைர காதணி பரிசாக கொடுத்திருக்கின்றார்கள்.
இப்போது கேரள அரசின் ஸ்டேட் அவார்ட் கடை திறப்பதில் இன்னும் உற்சாகமாக இருக்கிறது.
விரைவில் ஒரு படத்தை டைரக்ட் பண்ணுவேன் என்று லலிதா குறிப்பிட்டுள்ளார்.



