தற்போது உலகளாவிய ரீதியில் ஒமிக்ரோன் தொற்றுப் பரவல் மிக வேகமாக பரவி அடைந்து வருகின்றது.
இந்நிலையில் ஒமிக்ரோன் கொவிட் திரிபானது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த வைரஸ் திரிபு 77 நாடுகளில் உறுதிப்படுத்தப்படுள்ளது.
இதுவரையில் பலருக்கு இந்த தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை என்பதுடன் முன்னோடி இல்லாத விகிதத்தில் இந்த திரிபு பரவலடைவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்,
அத்துடன் ஒமிக்ரோன் கொவிட் திரிபை குறைத்து மதிப்பிடுகின்றமை தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் திரிபுகள் காரணத்தால் தொற்றாளர்கள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டதுடன் அதன் ஆபத்தும் அதிகமாக காணப்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
