அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி.
அவரது வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சென்னையில் மாத்திரம் 14 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது.
இதற்கமைய கோவை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் , கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்கள் சில இடங்களிலும் இந்த சோதனை நடவடிக்கை நடைபெற்று வருகின்றது.
மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.



