மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாட்டில் 14 இலட்சத்து 40 ஆயிரத்து 705 பேருக்கு கொவிட் செயலுக்கி தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 20 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கை பிரஜையும் இரண்டாவது கொவிட் தடுப்பூசி பெற்று மூன்று மாதங்கள் ஆனதும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நாடளாவிய ரீதியில் எந்தவொரு தடுப்பூசி நிலையத்திலும் பெற்றுக் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.



