தமிழக அரசு வெளியிட்ட விசேட அறிவிப்பு…!!

0

தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட யூரியா, டி, ஏ. பி மற்றும் பொட்டாஷ் உரங்களை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்றும் கூடுதலாக உரங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை மந்திரிக்கு, வேளாண்மைத் துறை அமைச்சர் எம். ஆர். கே.பன்னீர்ச் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய டிசம்பர் மாதத்திற்கு கூடுதலாக யூரியா உரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது நிலவி வரும் பொட்டாஷ் உரத்தேவையினை கருதி தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள பொட்டாஷ் உரத்தில் இருந்து 20 ஆயிரம் மெட்ரிக் டன் கூடுதலாக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தேவைப்படும் மாவட்டங்களுக்கு மாவட்டங்களுக்கு விரைவாக அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள பொட்டாஷ் உரத்தின் விற்பனை விலை மூட்டை ஒன்று ரூபாய் 1700 என நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த விலை ஏற்றம் புதிதாக வந்தடைந்துள்ள பொட்டாஷ் உரக்குவியலுக்கு மாத்திரமே பொருந்தும்.

ஏற்கனவே இருப்பில் உள்ள 18 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் பொட்டாஷ் உர மூட்டையில் அச்சிடப்பட்டுள்ள படி ரூபாய் 1040 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply