12 வயதுக்கும் குறைவான சுற்றுலா பயணிகள் சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

0

12 வயதிற்கும் குறைவான சுற்றுலா பயணி சிறுவர்களுக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள புதிய சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 12 வயதிற்கு மேற்பட்டோர் இலங்கைக்கான விமானத்தில் பயணிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பெறப்பட்ட பரிசோதனை அறிக்கையை தன் வசம் வைத்திருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 754 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் இருவர் வெளி நாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

Leave a Reply