மும்பையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு அமுலில்.

0

தென் ஆபிரிக்காவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் தொற்று தற்போது இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 ஆம் திகதி பெங்களூர் டாக்டர் உட்பட இரண்டு பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

பின்னர் இதன் தொடர்ச்சியாக மராட்டியம் , ராஜஸ்தான், குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் பலருக்கு ஒமிக்ரோன் தொற்று பரவியுள்ளது.

அத்துடன் கொவிட் முதல் மற்றும் 2 வது அலையின் போது மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்டது.

அவ்வாறு ஒமிக்ரோன் வைரஸ் நோய்யும் மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்தியா முழுவதும் குறித்த வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 32 ஆக உயர்வடைந்துள்ளது.

. மேலும் மகாராஷ்டிராவில் இந்த ஒமிக்ரோன் வைரஸ் தொற்று அதிகம் பரவலடைந்து வருவதனால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக மும்பையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply