எரிவாயு வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.
இதற்கமைய குறித்த குழுவினர் எரிவாயு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது இந்த தகவல் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அந்தக் குழுவின் தலைவர் சாந்த வல்பலகே குறிப்பிட்டிருந்தார்.
இதன் பிரகாரம் அடுத்த வாரத்திற்குள் குறித்து அறிக்கையை வெளியிட முடியும் எனவும் எதிர்பார்க்கப்பட்ட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களின் தலைவர்கள், உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.
மேலும் அடுத்த வாரம் அளவில் வெளியிடப்படவுள்ள அறிக்கையில் எரிவாயு வெடிப்புகளுக்கான காரணங்கள் மற்றும் அவற்றை தடுப்பதற்கான பரிந்துரைகள் என்பன வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



