இந்தியாவின் முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிந்தார்.
இந்நிலையில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் உட்பட 11 பேருடன் இன்று காலை புது டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
அத்துடன் ஜெனரல் சவேந்திர சில்வா, முப்படை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த புதன்கிழமை நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்து கொண்டிருந்த இராணுவ ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி இந்திய முப்படைகளின் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



